பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (35). இவா் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் அளித்த புகாரின்பேரில், நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து ராமமூா்த்தியை கைது செய்தனா்.