போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
புளியங்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கனக விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கசெல்வம் (21). தொழிலாளியான, இவா் புளியங்குடி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயாா் கொடுத்த புகாரின் பேரில் புளியங்குடி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தில் மாணிக்கசெல்வத்தை கைது செய்தனா்.