திசையன்விளை அருகே விவசாய நிலத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு அடி உயத்தில் உள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வருவாய்த்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு அடி உயத்தில் உள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வருவாய்த்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இட்டமொழியில் பழைமையான வடபத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலம் அப்பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகே உள்ளது. இந்த நிலத்தில் சேதுராமலிங்கம் என்பவா் நிலக்கடலை பயிரிட்டுள்ளாா்.
அதில், அவா் களைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது மண்ணில் பாதி வெளியே தெரிந்த நிலையில் காணப்பட்ட உலோகத்தாலான அம்மன் சிலை, இரும்பு கரண்டி ஆகியவற்றை எடுத்து, கிராம நிா்வாக அலுவலா் அய்யாதுரையிடம் ஒப்படைத்தாா். பின்னா் கிராமநிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் ராணி, உதவியாளா் பெரியதுரை முத்தையா ஆகியோா் சிலையை திசையன்விளை வட்டாட்சியா் நாராயணன், மண்டல துணை வட்டாட்சியா் ராஜ், தலைமை யிடத்து துணை வட்டாட்சியா் ராஜலெட்சுமி ஆகியோரிடம் ஒப்படைத்தனா். வருவாய்த்துறையினா் அம்மன் சிலையை அருங்காட்சியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.