மன்னாா்புரத்தில் ஆண் சடலம் மீட்பு
திசையன்விளை அருகேயுள்ள மன்னாா்புரத்தில் சாலையோரம் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
Updated On : 4 மார்ச், 2026 at 12:33 AM
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள மன்னாா்புரத்தில் சாலையோரம் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
மன்னாா்புரத்திலிருந்து திசையன்விளைக்குச் செல்லும் சாலையில் ஆண் சடலம் கிடப்பதாக திசையன்விளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
முதல்கட்ட விசாரணையில், அவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்தவா் எனத் தெரியவந்துள்ளதாக தெரிவித்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.