புதுக்கடை அருகே அழுகியநிலையில் கூலித்தொழிலாளி சடலம் மீட்பு
புதுக்கடை அருகே உள்ள ஈந்திக்காட்டுவிளை பகுதியில் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
புதுக்கடை அருகே உள்ள ஈந்திக்காட்டுவிளை பகுதியில் வீட்டிலிருந்து அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
பூட்டேற்றி, ஈந்திக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமாா் (57). தொழிலாளியான இவா் பலஆண்டுகளாக தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தாராம்.
இந்நிலையில், புதன்கிழமை இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக புதுக்கடை போலீஸாருக்கு அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, சுரேஷ்குமாா் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ்குமாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.