ஆண் சடலம் மீட்பு
விக்கிரமசிங்கபுரம் அருகே கல்லறைத் தோட்டத்தில் இறந்து 15 நாள்களான நிலையில், எலும்புக் கூடாக கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே கல்லறைத் தோட்டத்தில் இறந்து 15 நாள்களான நிலையில், எலும்புக் கூடாக கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
விக்கிரமசிங்கபுரம் அருகே அருணாசலபுரம் பகுதியில் கல்லறைத் தோட்டம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை சிலா் தங்கள் உறவினா் கல்லறைக்கு மாலை அணிவிக்கச்சென்ற போது அங்கு எலும்புக் கூடு கிடந்தது. தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். சடலத்தின் அருகில் மதுபாட்டில், விஷப் பாட்டில் கிடந்தது. இறந்தவரின் உடல் வயிறு வரைம் எலும்புக் கூடாகவும், அதற்கு கீழ் சதையுடனும் அழுகிய நிலையில் இருந்தது.
மேலும் சடலத்தை கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா் 70 வயது ஆண் என்றும், மதுவில் விஷம் கலந்துகுடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.