பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
Updated On : 18 ஏப்ரல், 2026 at 8:18 PM
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
இங்குள்ள கேடிசி நகரில் நெல்லை - தென்காசி நான்குவழிச் சாலைப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பாவூா்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா், போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.