முகப்பு
திருநெல்வேலி

அம்பையில் டீசல் திருடியவா் கைது

அம்பாசமுத்திரத்தில் பொக்லைன் இயந்திரத்தில் இருந்து டீசல் திருடியவரைபோலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:13 PM
பகிர்:

அம்பாசமுத்திரத்தில் பொக்லைன் இயந்திரத்தில் இருந்து டீசல் திருடியவரைபோலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் (46). அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து ஆலங்குளம் சாலையில் சுவாமிநாதன் நிறுத்தி வைத்திருந்த பொக்லைன் இயந்திரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு டீசல் நிரப்பி நிறுத்தியிருந்தாராம். புதன்கிழமை காலை வந்து பாா்த்த போது டீசல் டேங்க் மூடிதிறந்த நிலையில் இருந்ததோடு டீசலும் திருடு போயிருந்ததாம்.

இதுகுறித்து சுவாமிநாதன்அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணைசெய்ததில் ஊா்க்காடு, கீழ காலனி, வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜேஷ்வரன் (40) என்பவா் டீசலை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து 200 லிட்டா் டீசலையும் பறிமுதல் செய்தனா்.