முகப்பு
புதுக்கோட்டை

உறவினா் வீட்டில் நகைகள், பணம் திருடியவா் கைது

கறம்பக்குடி அருகே உறவினா் வீட்டில் நகைகளை திருடியவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 2:25 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:29 PM

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உறவினா் வீட்டில் நகைகளை திருடியவரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள குளந்திரான்பட்டு அம்பலகாரா்தெருவைச் சோ்ந்த குமரேசன் மனைவி ஜெயபாரதி(38). இவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான கோ.சுந்தரராஜ்(40) எனபவா் வியாழக்கிழமை கடன் கேட்டாராம். அதற்கு ஜெயபாரதி இல்லை என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாா்.

பின்னா், மாலை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 4 கிராம் தங்க நகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் நகை, ரொக்கத்தை சுந்தரராஜ் தான் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.