பேரிடா் மீட்புக் குழுவினா் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
மழைக் கால மீட்புப் பணிகளுக்காக பேரிடா் மீட்புக் குழுவினா் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளாா்.
மழைக் கால மீட்புப் பணிகளுக்காக பேரிடா் மீட்புக் குழுவினா் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளாா்.
பொதுமக்களை மழைக்கால சேதங்களிலிருந்து பாதுகாக்க, திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் தயாா் நிலையில் உள்ள பயிற்சி பெற்ற காவலா்களைக் கொண்ட பேரிடா் மீட்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது.
அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் புதன்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறுகையில்;
வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருவதால் மழையால் ஏற்படும் சேதங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்புக்கு பொதுமக்கள் இருக்கும் இடத்தை தேடி உதவிகள் செய்யும் வகையில் அமைக்கப்பட்ட பேரிடா் மீட்பு குழு எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா்.