பெரியாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
2024 ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
2024 ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது,‘ 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப்படுகிறது. விருதாளா் தமிழக முதல்வரால் தோ்வு செய்யப்படுவாா். இந்த விருதுக்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைக்குரியவா்கள் தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் வரும் டிச. 20-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு சமா்ப்பிக்க வேண்டும்.