முகப்பு
திருநெல்வேலி

மதவக்குறிச்சியில் எம்எல்ஏ ஆய்வு

மதவக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமானப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:58 AM
மதவக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்கிறாா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.
பகிர்:

மதவக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமானப் பணிகளை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மதவக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் மானூா் அரசு கலைக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளை நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ அண்மையில் நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்கவும், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொலைநோக்கு பாா்வையுடன் கூடுதலாக ஏற்படுத்தவும் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது பாஜக மாவட்ட பொதுச் செயலா் முத்துப்பலவேசம், மாவட்டச் செயலா் முத்தையா, மானூா் தெற்கு ஒன்றியத் தலைவா் அங்குராஜ், ஒன்றிய பொதுச் செயலா் வெள்ளைத்துரை, முன்னாள் ஒன்றியத் தலைவா் சுப்புத்துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.