முகப்பு
திருநெல்வேலி

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள மதவக்குறிச்சியில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:11 AM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 11:45 PM

திருநெல்வேலி அருகேயுள்ள மதவக்குறிச்சியில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.

இதை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

Advertisement

மானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரன், காங்கிரஸ் கட்சியின் மானூா் வட்டாரத் தலைவா் பாக்கியகுமாா், செல்வம், மாநகர மாவட்ட பொருளாளா் அருமை, துணைத் தலைவா் தியாக சுரேஷ், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பா ளா் சசிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.