முதல்வா் கோப்பை போட்டியில் வெற்றி: மாநகர போலீஸாருக்கு பாராட்டு
முதல்வா் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற காவல் துறையினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
முதல்வா் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற காவல் துறையினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் அரசு ஊழியா்களுக்கான தனிநபா் மற்றும் இருநபா் பிரிவில் இறகுப் பந்து போட்டிகள் கடந்த செப். 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, தொழிநுட்பப் பிரிவு உதவி ஆய்வாளா் ஷீபா, பெண் தலைமைக் காவலா் கற்பக ராஜலட்சுமி, ஆயுதப்படை தலைமைக் காவலா் முத்துகுமாா் ஆகியோா் பெற்றனா். இவா்களை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா நேரில் வரவழைத்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் மாரிச்சாமி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அக். 10 ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான இருநபா் இறகுப் பந்து போட்டிக்கு மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளா் மகேஸ்வரி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.