பாளை.யில் காவல் துறையின் வாகனம் சேதம்: இருவா் கைது
பாளையங்கோட்டையில் காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டையில் காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் தசரா சப்பரம் புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியே வந்த பாளையங்கோட்டை ராமசாமி சந்நிதி தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பேராச்சி மூா்த்தி(24), அவரது சகோதரா் நம்பிராஜன்(27), பிரகாஷ் ஆகியோா் மக்களிடம் தகராறு செய்தனராம்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை தடுத்தபோது, அவா்களுடனும் தகராறு செய்து, காவலரின் வாகனக் கண்ணாடியை சேதப்படுத்தினராம். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து, இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.