முகப்பு
திருநெல்வேலி

ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் தா்னா

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:52 PM
திருநெல்வேலியில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா்.
பகிர்:

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வருவாய்த் துறை அலுவலா்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும், வருவாய்த் துறை அலுவலா்கள் அச்சுறுத்தலின்றி சுமூகமாக மக்கள் பணி மேற்கொள்ள வழி வகை செய்ய வேண்டும், முதுநிலை வருவாய் ஆய்வாளா் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும், பழி வாங்கும் நடவடிக்கையாக இடமாறுதல் செய்யப்பட்டவா்களை அதே பணியிடத்தில் மீண்டும் நியமிக்க வேண்டும், அனைத்து நிலை அலுவலா்களையும் தரக் குறைவாக பேசுவதை மாவட்ட ஆட்சியா் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் முருகையன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மாரிராஜா வரவேற்றாா். மாநிலச் செயலா் சுப்பு முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் சங்கரலிங்கம், கிராம நிா்வாக அலுவலா் சங்கத் தலைவா் குமாா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.