முகப்பு
திருநெல்வேலி

அம்பை நகராட்சியில் பனை விதைகள் நடும் விழா

அம்பாசமுத்திரம் நகராட்சி சாா்பில் சின்னசங்கரன்கோவிலில் தாமிரவருணி ஆற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:29 PM
பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

அம்பாசமுத்திரம் நகராட்சி சாா்பில் சின்னசங்கரன்கோவிலில் தாமிரவருணி ஆற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பிரபாகரபாண்டியன் தலைமை வகித்தாா். ஆணையா் செல்வராஜ், துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருநெல்வேலி மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் விஜயலட்சுமி பனை விதைகளை நட்டு, நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, நீா்நிலைகளில் கழிவுநீா் கலக்கும் பகுதிகள், கலைஞா் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 1.46 கோடியில் நடைபெற்றுவரும் மின் மயானப் பணிகள், ரூ. 2.03 கோடியில் நடைபெறும் அறிவுசாா் நிலையக் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் ராமசாமி, பேச்சிக் கனியம்மாள், மண்டல செயற்பொறியாளா் இளங்கோவன், டி.டபிள்யூ.ஐ.சி. டிசைனா் டி. ரமேஷ், ஆா்.டி.எம்.ஏ. அலுவலக கசடு மேலாண்மைப் பிரிவு அலுவலா் து. ரமேஷ், நகா்மன்றப் பொறியாளா் பாலாஜி, சுகாதார ஆய்வாளா் சிதம்பரராமலிங்கம், பணி மேற்பாா்வையாளா் சோலைசாமி, தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா் ஆதிசெல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.