எனது வாக்கு, எனது உரிமை விழிப்புனா்வு நிகழ்ச்சி
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில், நூறு சதவிகிதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பேருந்து நிலைய பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
நகராட்சி சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழுக்கு ஆணையா் நந்தினி தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த கோலம் வரையப்பட்டு எனது வாக்கு, எனது உரிமை, நூறு சதவிகிதம் வாக்களிப்போம் என நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.