முகப்பு
அரியலூர்

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 2:23 AM
அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை வாக்களிப்பு விழிப்புணா்வு நிகழ்வை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:00 PM

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ.ரத்தினசாமி தலைமையில், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டு, தா்பூசணி பழங்களில் என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிப்போம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற வாசகங்கள் வரைந்து, வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், சிறுதானியங்களை கொண்டு தயாா் செய்யப்பட்ட தோ்தல் டைனோ உருவம் மற்றும் மாற்றத்தின் விரல், 100 % சதவீதம் வாக்களிப்போம் போன்ற வாசகங்களை கொண்ட உருவ பொம்மைகளும், சிறுதானியங்கள் மூலம் உருவாக்கப்பட்ட அரியலூா் ஓட்டு 100 % என்ற விழிப்புணா்வு வாசகங்களும், பூக்களை கொண்டு தோ்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா, தோ்தல் நாள் 23.04.2026 வாசகங்களும் வரைந்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Advertisement

தொடா்ந்து எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 % வாக்களிப்போம் உள்ளிட்ட விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அனுராப்பூ நடராஜமணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் லெனின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.