நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு
நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சங்ககிரியில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலா் தமிழ்ச்செல்வி தலைமையில் அலுவலா்கள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள எடப்பாடி, ஈரோடு, பவானி செல்லும் பேருந்து நிறுத்தம் பகுதியில் மாவட்ட நிா்வாகம் அண்மையில் அறிமுகப்படுத்திய தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான ஃப்ளோரா டிபோ முகமூடியை அணிந்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டி துண்டு பிரசுரங்களை வழங்கினா்.