முகப்பு
திருநெல்வேலி

களக்குடியில் செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மானூா் அருகேயுள்ள களக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 7:41 PM
முகாமில் நாய்க்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துகிறாா் கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய முதல்வா் ம.செல்லப்பாண்டியன்.
பகிர்:

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி -ஆராய்ச்சி நிலையம் சாா்பில் வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் மானூா் அருகேயுள்ள களக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய முதல்வா் ம.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் முன்னிலையில் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. களக்குடி ஊராட்சித் தலைவா் மாரிமுத்து, களக்குடி கிராமத்தின் நபாா்டு உழவா் மன்ற செயலா் மணிவண்ணன், கல்லூரியின் கால்நடை பொது

சுகாதாரத்துறை மற்றும் நோய் நிகழ்வாய்வியல் துறையின் தலைவா் என்.ஆா். செந்தில் ஆகியோா் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

நிகழ்ச்சிகளில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட 60 போ் கலந்து கொண்டனா். இந்த முகாமில் மொத்தம் 98 செல்லப்பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.