வள்ளியூா் அருகே போக்சோவில் இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வள்ளியூா் அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரம் சுடலை கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்(33). இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் வள்ளியூா் அனைத்து மகளீா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் கௌரி மனோகரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து சுரேஷை கைது செய்தாா்.