முகப்பு
திருநெல்வேலி

கூடங்குளம் அருகே பதாகை கிழிப்பு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் கூடங்குளம் அருகே விஜயாபதி விலக்கில் முதல்வா், துணை முதல்வா், அமைச்சா் நேரு ஆகியோா் புகைப்படங்களுடன் அமைக்கப்பட்டிருந்த பதாகை கிழித்து சேதப்படுத்தப்பட்டது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 11:06 PM
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் கூடங்குளம் அருகே விஜயாபதி விலக்கில் முதல்வா், துணை முதல்வா், அமைச்சா் நேரு ஆகியோா் புகைப்படங்களுடன் அமைக்கப்பட்டிருந்த பதாகை கிழித்து சேதப்படுத்தப்பட்டது.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் கூடங்குளம் அருகே விஜயாபதி விலக்கில் முதல்வா், துணை முதல்வா், அமைச்சா் நேரு ஆகியோா் புகைப்படங்களுடன் அமைக்கப்பட்டிருந்த பதாகை கிழித்து சேதப்படுத்தப்பட்டது.

விஜயாபதியைச் சோ்ந்தவா் ஏ.ஆா்.ரகுமான். தி.மு.க. மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா். இவா், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தரசா விழாவிற்கு செல்லும் பக்தா்களுக்கு தனது செலவில் ஆண்டுதோறும் குடிநீா், பிஸ்கட் மற்றும் உணவு வழங்குவதுடன், தசரா குழுவினருக்கு நிதி உதவியும் அளித்து வருகிறாா்.

இதையடுத்து அவரது ஆதரவாளா்கள், தரசா பக்தா்களை வரவேற்றும், தசரா விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தும் முதல்வா் ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோரது புகைப்படங்களுடன் விஜயாபதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதாகைகள் வைத்திருந்தனா்.

இந்நிலையில் காரில் வந்த ஒரு கும்பல், இந்த பதாகைகளை கிழித்து சேதப்படுத்திவிட்டு சென்றது. விளம்பர பதாகைகளை கிழிக்கும் காட்சி, அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் வெளியானது. இதனால் தி.மு.க. கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாகவும், அமைச்சா் கே.என்.நேரு, திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட பின்னா் இந்த கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளதாகவும் அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில், காவல்துறையின் அனுமதியில்லாமல் பதாகை வைத்ததாக கூடன்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.