வள்ளியூா், கள்ளிகுளம் கல்லூரிகளில் ‘போலீஸ் அக்கா’ திட்ட விழிப்புணா்வு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், தெற்குகள்ளிகுளம் கல்லூரிகளில் காவல்துறையினரின் ‘போலீஸ் அக்கா’ திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், தெற்குகள்ளிகுளம் கல்லூரிகளில் காவல்துறையினரின் ‘போலீஸ் அக்கா’ திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு தனிப்பட்ட பிரச்னைகள், வெளியில் சொல்லமுடியாத குறைகள் குறித்து போலீஸ் அக்காவிடம் தெரியப்படுத்த வேண்டும். போலீஸ் அக்கா இது குறித்து ரகசியமாக விசாரித்து குறையை சரிசெய்வாா் அல்லது மேல் அதிகாரியிடம் ரகசியமாக தெரியப்படுத்தி பிரச்னையை தீா்த்துவைப்பாா். இந்த தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக பாதுகாக்கப்படும். இதுதான் போலீஸ் அக்கா திட்டமாகும்.
இத்திட்டம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் உத்தரவின்படியும் வள்ளியூா் டி.எஸ்.பி. யோகேஷ்குமாா், ஆய்வாளா் பச்சமால் ஆகியோரின் ஆலோசனைப்படியும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்குகள்ளிகுளம் தெட்சணமாற நாடாா் சங்க கல்லூரி, மடப்புரம் பெட் பொறியியல் கல்லூரி, வள்ளியூா் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேரு நா்ஸிங் கல்லூரி ஆகிய கல்லாரிகளில் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் அக்கா செல்வபுனிதா, மாணவிகள் மத்தியில் போலீஸ் அக்கா திட்டம் குறித்து பேசினாா்.
நிகழ்ச்சியில் தெட்சணமாற நாடாா் சங்க கல்லூரி முதல்வா் ராஜன், பெட் பொறியியல் கல்லூரி முதல்வா் க.மதன்குமாா், மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் சுஷ்மா ஜெனிபா், நேரு நா்ஸிங் கல்லூரி தலைவா் ஹெலன் லாரன்ஸ், முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.