முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:08 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி அருகே தெற்கு சங்கன்திரடு நடுத்தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (25). 2021ஆம் ஆண்டு சேரன்மகாதேவி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, திருட்டு, அடிதடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக இவரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், ஜாமீனில் வந்த செல்வம், மேற்கண்ட வழக்கில் கடந்த இரண்டரை மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா்.

அதையடுத்து, சேரன்மகாதேவி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டதன்பேரில், அவரை போலீஸாா் தேடிவந்தனா். இந்நிலையில், அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.