ஏா்வாடி சந்தனமாரியம்மன் கோயில் தசரா விழா
ஏா்வாடி வடக்கு பிரதான சாலையில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயில் தசரா திருவிழா செவ்வாய்க்கிழமை (அக்.15) நடைபெற்றது.
ஏா்வாடி வடக்கு பிரதான சாலையில் அமைந்துள்ள சந்தனமாரியம்மன் கோயில் தசரா திருவிழா செவ்வாய்க்கிழமை (அக்.15) நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் ஜகாலை 6 மணிக்கு கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, 7 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து அபிஷேக தீா்த்தம் எடுத்து வருதல், 8 மணிக்கு பால்குடம் எடுத்தல், 9 மணிக்கு பூா்ணாஹுதி, 11 மணிக்கு பஞ்சதிரவிய கும்பாபிஷேக வழிபாடு, 12 மணிக்கு அம்பாளுக்கு உச்சிகால பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பிற்பகல் 1 மணிக்கு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னா், மாலை 6 மணிக்கு கோயில்வாசல் விநாயகா் ஆலயத்திலிருந்து அம்பாள் கும்பம் தரித்து சகல பரிவார தேவதைகளுடன் வீதி உலா வருதலும், இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 9 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் பவனிவருதலும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனா்.