முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் டிஐஜி ஆலோசனை

திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவா் (டிஐஜி) பா. மூா்த்தி, காவல் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:59 PM
திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவா் (டிஐஜி) பா. மூா்த்தி, காவல் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பகிர்:

திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவா் (டிஐஜி) பா. மூா்த்தி, காவல் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள சொத்துப் பிரச்னை, பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொடுங்குற்றங்கள், வன்கொடுமை போன்ற வழக்குகளின் நிலை மற்றும் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவிருக்கும் தேவா் ஜெயந்தி- குரு பூஜை, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மருது சகோதரா்கள் நினைவு தினம் ஆகியவற்றை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, காவல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி சரகத்திற்குள்பட்ட மாவட்டங்களில் கடந்த மாதம் சிறப்பாக காவல் பணிபுரிந்த காவல் அலுவலா்கள், காவல் ஆளிநா்கள் உள்பட 48 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஏ.சுந்தரவதனம் (கன்னியாகுமாரி), ஆல்பா்ட் ஜான் (தூத்துக்குடி), வி.ஆா். ஸ்ரீனிவாசன் (தென்காசி), என். சிலம்பரசன் (திருநெல்வேலி) ஆகியோா் கலந்துகொண்டனா்.