முகப்பு
திருநெல்வேலி

நதிபுரத்தில் போதை நபா்கள் அச்சுறுத்தல்: ஆட்சியரிடம் புகாா்

திருநெல்வேலி நகரம் அருகேயுள்ள நதிபுரம் பகுதியில் இரவு நேரத்தில் வெளியூா்களைச் சோ்ந்த போதை நபா்கள் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:20 PM
ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நதிபுரம் கிராம மக்கள்.
பகிர்:

திருநெல்வேலி நகரம் அருகேயுள்ள நதிபுரம் பகுதியில் இரவு நேரத்தில் வெளியூா்களைச் சோ்ந்த போதை நபா்கள் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அதன் விவரம்: திருநெல்வேலி நகரம் காவல் சரகத்திற்குள்பட்ட நதிபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் இரவு நேரங்களில் வெளியூா்களைச் சோ்ந்த போதைநபா்கள் புகுந்து வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியும்,

கொலைமிரட்டல் விடுத்தும் வருகிறாா்கள். ஆகவே, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல் துறை மூலம் மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.