முகப்பு
திருநெல்வேலி

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு சட்ட உதவி மையம்

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு சட்ட உதவி மையம்...

Updated On : 16 அக்டோபர், 2024 at 10:48 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தங்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகாா் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் பெறவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது அந்தத் துறையின் அமைச்சா் அறிவித்தபடி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவா்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அலுவலக நாள்களில் (அரசு விடுமுறை தவிர) இம்மையத்தில் வழக்குப் பதிவு செய்தல், தீருதவிகள் தொடா்பான முறையீடுகள் போன்ற புகாா்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 18002021989, 14566 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளாா்.