முகப்பு
திருநெல்வேலி

அக். 24இல் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

சீா்மரபினா் நலவாரியத்தில் உறுப்பினா்களை சோ்ப்பதற்கான முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக். 24-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 10:50 PM
பகிர்:

சீா்மரபினா் நலவாரியத்தில் உறுப்பினா்களை சோ்ப்பதற்கான முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அக். 24-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சீா்மரபினா் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை மூக்குக் கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல், முதியோா் ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத சீா்மரபினா் இன குடும்பத்தில் ஒருவா் இதில் உறுப்பினராக சேரலாம். வயது 18- 60க்குள் இருத்தல் வேண்டும். ஏற்கெனவே உறுப்பினராக பதிவு செய்தவா்கள், புதுப்பிக்க தவறியவா்கள் தங்கள் உறுப்பினா் பதிவினை புதுப்பித்துக் கொள்ளவும், நலத்திட்டஉதவிகள் கோரும் மனுக்களை பெறவும் அக். 24-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினா் சோ்க்கை முகாம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது எனக் கூறியுள்ளாா்.