முகப்பு
திருநெல்வேலி

அதிக மதிப்பெண் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

அதிக மதிப்பெண் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு மேல் படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கி மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா புதன்கிழமை பாராட்டினாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:15 PM
அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா உள்ளிட்டோா்.
பகிர்:

அதிக மதிப்பெண் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு மேல் படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கி மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா புதன்கிழமை பாராட்டினாா்.

இதையொட்டி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளினா்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையின் முதல் தவணை மற்றும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகை வழங்கி காவல் ஆணையா் பாராட்டினாா்.

இதில், காவல் துணை ஆணையா்கள் கீதா (மேற்கு), அனிதா (தலைமையிடம்), விஜயகுமாா் (கிழக்கு), காவல் அதிகாரிகள், பெற்றோா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.