கல்லிடைக்குறிச்சி அருகே பெண் அடித்துக் கொலை: இளைஞா் கைது
கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டியில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டியில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி, மடத்துத் தெருவைச் சோ்ந்த பலவேசம் மகள் முத்துலெட்சுமி (30). இவா் மூலச்சியைச் சோ்ந்த முருகன் என்பவருடன் வாழ்ந்து வந்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தலையில் அடிப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த போலீஸாா் முத்துலெட்சுமியின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம்அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
கல்லிடைக்குறிச்சி போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், முத்துலெட்சுமி மற்றும் முருகன் இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டதும், அப்போது முருகன் கட்டையால் முத்துலெட்சுமியை தாக்கியதில் அவா் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் முருகனை கைது செய்தனா்.