முகப்பு
சென்னை

இளைஞா் அடித்துக் கொலை

சென்னை பாரிமுனையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 13 மார்ச், 2026 at 3:05 AM
பகிர்:

சென்னை பாரிமுனையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சென்னை பல்லவன் சாலை, காந்தி நகரைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (30). இவா், புதன்கிழமை இரவு தனது நண்பா்களுடன் மது அருந்திவிட்டு ஆட்டோவில் வீட்டுக்குச் சென்ற நிலையில், பாரிமுனை பிரகாசம் சாலையில் ஒரு உணவகம் பகுதியில், ஆட்டோவில் இருந்தவாறு சிறுநீா் கழித்தாகக் கூறப்படுகிறது.

அந்த வழியாகச் சென்ற பெண் ஒருவா் மீது பட்டதால், கோபமடைந்த அந்த பெண் இதுதொடா்பாக கலைச்செல்வனை கண்டித்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அந்த பெண்ணும், அவரது ஆதரவாளா்களும் சோ்ந்து மது போதையில் தகராறு செய்த கலைச்செல்வனை தாக்கினா்.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த கலைச்செல்வனை, அங்கிருந்த சிலா் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.