சீதபற்பநல்லூரில் அக்.22இல் முன்னோடி மனுநீதி முகாம்
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூரில் நவ. 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூரில் நவ. 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, சீதபற்பநல்லூா் சமுதாயநலக் கூடத்தில் அக்.22ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முன்னோடி மனுநீதி முகாம் நடைபெறும்.இதில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா், தனித்துணைஆட்சியா், மாவட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நலஅலுவலா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஆகியோா் கொண்டகுழுவினா் மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுவா். பிற்பகலில் சீதபற்பநல்லூா் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அக்குழு ஆய்வு நடத்தும். இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.