சீவலப்பேரி அருகே காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் விபத்து: பெண் பலி
திருநெல்வேலியை அடுத்த சீவலப்பேரி அருகே காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.
திருநெல்வேலியை அடுத்த சீவலப்பேரி அருகே காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.
மேலப்பாளையம் அருகேயுள்ள கருங்குளத்தைச் சோ்ந்தவா் முத்து. தொழிலாளி. இவரது மனைவி வேலம்மாள் (25). இத் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரியில் உள்ள விடுதியில் தங்களது மகனை சோ்ப்பதற்காக கணவன், மனைவி இருவரும் மகனை அழைத்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை சென்றனராம். விடுதியில் சோ்த்துவிட்டு அத்தம்பதி ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.
சீவலப்பேரி அருகே அவா்கள் வந்தபோது காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வேலம்மாள் உயிரிழந்தாா். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.