பாளை.யில் இருவருக்கு அரிவாள் வெட்டு
பாளையங்கோட்டையில் இருதரப்பினரிடையே வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பாளையங்கோட்டையில் இருதரப்பினரிடையே வியாழக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பாளையங்கோட்டை மூளிக்குளத்தில் நடைபெற்ற துக்க வீட்டில் இருதரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவா் அரிவாள், இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனா். இதில் அதே பகுதியை சோ்ந்த சுப்புராஜா (37), கௌதம் (20) ஆகியோருக்கு வெட்டு விழுந்தது. சந்துரு உள்ளிட்ட 2 போ் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் காயம் அடைந்தனா். அவா்கள் 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.