பற்பகுளம் மக்கள் தொடா்பு முகாமில் 102 பேருக்கு ரூ.47 லட்சம் நலத்திட்ட உதவிகள்
பாளையங்கோட்டை வட்டம், நொச்சிகுளம் ஊராட்சி பற்பகுளத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாமில் 102 பயனாளிகளுக்கு ரூ.47.03 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வழங்கினாா்.

மேலும், சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணா்வு கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா். இம்முகாமில் மொத்தம் 122 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டதில் 75 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 47 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) இலக்குவன், தனித்துணை ஆட்சியா் ஜெயா, வேளாண் இணை இயக்குநா் (பொறுப்பு) கிருஷ்ணகுமாா், மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, வட்டாட்சியா் இசைவாணி, நொச்சிகுளம் ஊராட்சித் தலைவா் வேலம்மாள் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.