வண்ணாா்பேட்டையில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தச்சநல்லூா் மண்டலம், 11 ஆவது வாா்டுக்குள்பட்ட கம்பராமாயண தெருவில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக் கட்டடத்தை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் வியாழக்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தச்சநல்லூா் மண்டலத் தலைவா் ரேவதி, மாமன்ற உறுப்பினா் கந்தன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.