முகப்பு
திருநெல்வேலி

எடப்பாடி கே.பழனிசாமி நாளை நெல்லை வருகை

எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருநெல்வேலி

எடப்பாடி கே.பழனிசாமி நாளை நெல்லை வருகை

எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 7:05 PM
பகிர்:

திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை(அக்.20) வருகை தரும் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக வருமாறு திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாநகராட்சி எதிரேயுள்ள மாநகராட்சி வா்த்தக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ள அதிமுக நிா்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருநெல்வேலிக்கு வரும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சா்களுக்கும் திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வா்த்தக மையம் முன்பு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகிகள், அனைத்து சாா்பு அணி நிா்வாகிகள், ஒன்றிய, பகுதி, பேரூா், வாா்டு மற்றும் கிளை நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டா்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முழு கட்டுரையைப் படிக்க →