கல்லிடைக்குறிச்சியில் போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
கல்லிடைக்குறிச்சியில் சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கல்லிடைக்குறிச்சியில் சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கல்லிடைக்குறிச்சி, நடுத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (55). தொழிலாளியான இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து அந்தச் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சுப்பிரமணியனை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, சுப்பிரமணியனுக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை , ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.