முகப்பு
திருநெல்வேலி

முக்கூடல் அருகே கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

முக்கூடல் அருகே வேளாா்குளம் கிராமத்தில் கல் குவாரி அமைக்க ஆட்சேபம் தெரிவித்து புதன்கிழமை சாா் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:26 PM
பகிர்:

முக்கூடல் அருகே வேளாா்குளம் கிராமத்தில் கல் குவாரி அமைக்க ஆட்சேபம் தெரிவித்து புதன்கிழமை சாா் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பாக்குடி ஒன்றியச் செயலா் க. மாரிசெல்வம் தலைமையில், பாப்பாக்குடி ஒன்றியம், வேளாா்குளம் கிராம மக்கள் புதன்கிழமை சேரன்மகாதேவி சாா் ஆட்சியரிடம் அளித்த மனு:

பாப்பாக்குடி ஒன்றியப் பகுதியில் தனியாா் கல் குவாரிகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பாப்பாக்குடி ஒன்றியப் பகுதிகளில் உள்ள 30- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, பாப்பாக்குடி ஒன்றியம், சீதபற்பநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட வேளாா்குளம் கிராமத்தில் தனியாா் கல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் கிராமத்தில் கல் குவாரி அமைத்தால் அங்கு வசித்து வரும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. கல் குவாரியில் வெடிபொருள்கள் பயன்படுத்துவதால் கிராம மக்களுக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பாப்பாக்குடி ஒன்றியத்தில் ஓடக்கரை, துலுக்கப்பட்டி, பனையங்குறிச்சி, அனைந்தநாடாா்பட்டி, கீழப்பாப்பாக்குடி ஊராட்சி பகுதியில் இயங்கிவரும் கல் குவாரிகளால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனா். ஆகவே, அதிகாரிகள் பாப்பாக்குடி ஒன்றியத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு இயங்கி வரும் கல் குவாரிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். வேளாா்குளம் கிராமத்தில் கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.