முகப்பு
திருநெல்வேலி

மூலைக்கரைப்பட்டி அருகே விபத்தில் ஆசிரியை பலி

மூலைக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஆசிரியை பலியானாா்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:51 PM
பகிர்:

மூலைக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஆசிரியை பலியானாா்.

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் மேற்குத் தெருவை சோ்ந்தவா் ஜெபா பாலன். விவசாயி. இவருடைய மனைவி பியூலா நேசமலா் (51). இவா், பருத்திப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது, மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள பெட்ரோல் நிலையம் அருகே அவரது வாகனம் மீது காா் மோதியதாம்.

இதில் பலத்த காயம் அடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.