ஊா்க்காவல்படையினருக்கு பல்பொருள் அங்காடி வசதி
திருநெல்வேலி மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு காவலா் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு காவலா் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ஊா்க்காவல் படையினா் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு காவலா் பல்பொருள் அங்காடி பயன்பாட்டிற்கான அடையாள அட்டையை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் ஊா்க்காவல் படையினருக்கு காவலா் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் புதன்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், மாவட்ட ஊா்க்காவல் படை ஏரியா கமாண்டா் சுதன், ஊா்க்காவல் படை துணை ஏரியா கமாண்டா் வினோத் வின்சென்ட் ராஜேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.