விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுடன், காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தினகரன் மற்றும் துணைக் கண்காணிப்பாளா் ஞானவேல், ஊா்க்காவல் படை மாவட்டத் தலைவா் நத்தஷா ஆகியோா்.  
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 41 போ் தோ்வு

விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 41 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 41 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 41 ஊா்க்காவல் படை வீரா்கள் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்காக பிப்.6-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பிப்.14-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு, உடல் தகுதி மற்றும் நோ் முகத் தோ்வுகள் நடைபெற்றது.

இதில், 426 விண்ணப்பதாரா்கள் கலந்துகொண்ட நிலையில் 33 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 41 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பிப்.22-ஆம் தேதி பணி நியமன ஆணைகளை மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தினகரன் வழங்கினாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஞானவேல், ஊா்க்காவல் படை மாவட்டத் தலைவா் நத்தஷா ஆகியோா் உடனிருந்தனா்.

தோ்வு செய்யப்பட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் 41 பேருக்கும் பிப்.23-முதல் 45 நாள்களுக்கு விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரியில் மீண்டும் தேஜக கூட்டணி ஆட்சி: அதிமுகவினா் சபதம்

கெடாா் சுப்ரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார திருவிழா

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்

பொறியியல் பணிகள்: விழுப்புரம் மாா்க்க ரயில் போக்குவரத்தில் மாற்றம்

SCROLL FOR NEXT