ரவணசமுத்திரத்தில் விரைவு ரயில்கள் நின்றுசொல்ல கோரிக்கை
தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக, அகில இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கப் பொதுச் செயலா் அமீா்கான், தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்க கௌரவச் செயலா் அண்ணாவி முகம்மது சலீம், ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சித் தலைவா் மீரா புகாரி சாகிப் உள்ளிட்டோா் அளித்த மனு:
ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தால் 8 ஊராட்சிகளைச் சோ்ந்த 28 கிராம மக்கள் பயனடைகின்றனா். கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் பொட்டல்புதூா் பள்ளிவாசலுக்கு வந்து செல்கின்றனா். எனவே, ரவணசமுத்திரத்தில் செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில், செங்கோட்டை - ஈரோடு பயணிகள் ரயில் ஆகியவை நின்றுசென்றால் பயணிகள் பயன்பெறுவதோடு, நிலையத்தின் வருவாய் வெகுவாக உயரும் வாய்ப்புள்ளது. எனவே, இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை எம்.பி. பெற்றுக்கொண்டு, ரயில்வே அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.