திருநெல்வேலி மாவட்ட கடற்கரைப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுறுவலை தடுக்கும் ‘சாகா் ஹவாஜ்’ என்னும் ஒத்திகைப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
கடலோரப் பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோரப் பாதுகாப்பு காவல்துறையினரால் இப்பயிற்சி அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட கடற்கரை பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. கடலோரப் பாதுகாப்பு குழுமத்தின் ஆய்வாளா் நவீன் தலைமையில் பாதுகாப்புப் படையினா் மற்றும் உள்ளூா் காவல்துறையினா் இந்த ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனா்.
கடற்கரை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவது போன்றும், அவா்களை காவல்துறையினா் கைது செய்வது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.