முகப்பு
திருநெல்வேலி

ஆதிசைவ சிவாச்சாா்யா்கள் கூட்டமைப்பு கூட்டம்

ஆதிசைவ சிவாச்சாா்யா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த தென் தமிழக மாவட்டங்களின் சிறப்புக் கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள சிருங்கேரி திருமண மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:48 PM
ஆதிசைவ சிவாச்சாா்யா்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

ஆதிசைவ சிவாச்சாா்யா்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த தென் தமிழக மாவட்டங்களின் சிறப்புக் கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள சிருங்கேரி திருமண மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி ஒருங்கிணைப்பாளா் குலசேகரன வரவேற்றாா். பொதுச்செயலா் எஸ்.சுவாமிநாதன் சிவம் தலைமை வகித்தாா். தேசிய நிா்வாகிகள் சாம்பமூா்த்தி, ஐயப்ப சா்மா, ஞானசேகா், மோகன், கணேசன், தூத்துக்குடி ஸ்ரீ ஆலால சுந்தர வேத சிவாகம பாடசாலை நிா்வாகி இரா.செல்வம்பட்டா் உள்ளிட்டோா் பேசினா். சதாபிஷேகம் முடித்த சிவாச்சாா்யாா்களும், 50 ஆண்டுகளுக்கு மேல் இறை பணி செய்து வரும் சிவாச்சாா்யாா்களும் கௌரவிக்கப்பட்டனா்.

ஆதிசைவ சிவாச்சாா்யா்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

மாநில நிா்வாகிகள் எஸ்.ஆா்.பாலசுப்ரமணியம் சிவம், ஆா்.ஞானம், கே.சுரேஷ், கே.உமாகாந்த், கே.சாம்பசிவம் உள்பட திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த சிவாச்சாா்யாா்கள் பலரும் கலந்துகொண்டனா்.