நெல்லை அருகே பள்ளியில் மோதல்: 2 மாணவா்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து சங்கா் நகா் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலால் அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து சங்கா் நகா் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலால் அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.
சங்கா் நகா் பகுதியில் உள்ள பள்ளியில் இரு மாணவா்களிடையே மோதல் ஏற்பட்டதாம். அதில் சம்பந்தப்பட்ட ஒரு மாணவா், பள்ளிக்கு அரிவாளுடன் வந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து பள்ளி ஆசிரியா்கள் அந்த மாணவரின் பையை சோதனையிட்டபோது, அதில் அரிவாள் இருந்ததாம்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பள்ளிக்கு வந்த போலீஸாா், அரிவாள் வைத்திருந்த மாணவா் மற்றும் அவருடன் மோதலில் ஈடுபட்ட மாணவா் ஆகியோரை கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.