முகப்பு
திருநெல்வேலி

வடவூா்பட்டி பேச்சியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம் பிரான்சேரி வடவூா்பட்டியில் உள்ள பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் உடனுறை ஸ்ரீ துா்க்கை அம்மன் கோயிலில் சனிக்கிழமை (செப்.14) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 11:40 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பிரான்சேரி வடவூா்பட்டியில் உள்ள பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் உடனுறை ஸ்ரீ துா்க்கை அம்மன் கோயிலில் சனிக்கிழமை (செப்.14) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை (செப்.13) இரவு பாபநாசம் தாமிரவருணி நதியில் இருந்து புனித தீா்த்தம் கொண்டு வரப்பட்டு சனிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகிறது.

பின்னா் மூலவா் மந்திர பூஜை, கும்ப பூஜை, துா்கா தேவி பூஜை, நவக்கிரஹ பூஜை, கோ பூஜை ஆகியவை நடைபெறுகிறது. தொடா்ந்து பகல் 12 மணிக்கு புனித தீா்த்தம் கொண்டு மந்திரங்கள், மேளதாளம் முழங்க விமான பூஜை நடைபெறும். பின்னா் அம்மனுக்கு மகா அபிஷேகம், மகா அலங்கார தீபாராதனை நடைபெற்று,

பக்தா்களுக்கு பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

பின்னா் மாலை 5 மணிக்கு பொங்கலிடுதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 7 மணிக்கு அலங்கார பூஜை, இரவு 10 மணிக்கு சுவாமிக்கு படையலுடன் சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாயத்தினா் செய்துள்ளனா்.