முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரம் பள்ளி மாணவா்கள் முதல்வா் கோப்பை போட்டிகளில் சாதனை

Updated On : 14 செப்டம்பர், 2024 at 12:13 AM
பகிர்:

விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் தொழிலாளா் நலச் சங்க மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்முதல்வா் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப். 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று தினங்கள்நடைபெற்றன. இதில், விக்கிரமசிங்கபுரம் பாப்நாசம் தொழிலாளா் நலச் சங்க மேல்நிலைப் பள்ளி சாா்பில் பங்கேற்ற மாணவிகள் கைப்பந்துப் போட்டியில் முதலிடம் பிடித்து ரூ. 42 ஆயிரம்ரொக்கப் பரிசும், கால்பந்துப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ. 36 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோ - கோ போட்டியில் பங்கேற்ற இரண்டு மாணவா் அணியினா் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்து முறையே ரூ. 24 ஆயிரம், ரூ. 12 ஆயிரம் ரொக்கப்பரிசும், டேபிள் டென்னிஸ் போட்டியில் மாணவா்கள் முதல் இடமும், மாணவிகள் இரண்டாம் இடமும் பிடித்து ரூ. 13 ஆயிரம் ரொக்கப் பரிசும் பெற்று சாதனைப் படைத்தனா்.

போட்டிகளில் சாதித்த மாணவா்கள், மாணவிகள், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்களை தலைமை ஆசிரியா், உதவித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →